fbpx
REஇந்தியா

மேலும் ஒரு இஸ்லாமியர் அடித்தே கொலை!

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் சில காவிகள் , அப்பாவி இஸ்லாமியர்களை அடித்தே  கொல்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்தச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நேற்று இரவும் பசு கடத்த வந்தவர் என்று நினைத்து இளைஞர் ஒருவரை  அடித்தே கொலை செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் மேவாத் மாவட்டத்தில் உள்ள கோல்கோவான் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான் (28).

இவர் தனது நண்பர் ஒருவருடன் இரண்டு பசுமாடுகளை ஹரியானாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்.

ராம்கர் பகுதியில் உள்ள லலாவண்டி கிராமத்துக்கு நேற்று வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்தது.

பசுக்களை அங்கிருந்து கடத்திச் செல்வதாக சொல்லி  அவர்களை கடுமையாகத் தாக்கியது. இதில் அக்பர் கான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அவருடன் வந்த நண்பர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், அக்பர் கானின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, இந்த செயலலில் ஈடுபட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இதே போன்ற சம்பவங்கள், கடந்த 2 வருடங்களாக அடிக்கடி நடந்து வருகின்றன.

கடந்த வருடம் உமர் முஹம்மது என்பவர் ரயில்வே டிராக்கில் கொல்லப்பட்டு கிடந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் பெலு கான் என்ற விவசாயியும் அடித்துக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close