fbpx
RETamil Newsதமிழ்நாடு

“பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே தி.மு.க. பயணம்” ஜெயக்குமார் அறிக்கை:

“அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் நாங்கள் எப்பொழுதும் அதனை கண்டு கலங்க போவதுமில்லை, எங்கள் கடமைகளை தவற போவதுமில்லை”. என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

முரோசொலி இதழில் வெளியான கடிதத்தில் ‘மு க ஸ்டாலின் அப்பாண்டமான குற்றச்சாட்டையும், நஞ்சை விதைக்கும் பழிச்சொல்லையும் தெரிவித்திருக்கிறார்’. திமுக-வினர் மனசாட்சியே இல்லாமல், மெரினாவில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் எனவும், சட்டப்பேரவைக்குள் ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேடை பேச்சில் தெரிவித்து வந்தனர்.

ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்தவும், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராகவும் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் ஏதாவது சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் குழப்பம் உருவாகும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு அவருக்கு அவமானத்தையே திமுக வினர் பரிசளித்தனர். அதிமுக அரசின் களங்கமில்லாத வெள்ளை உள்ளம் புரியாது என்றும், பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே திமுக பயணித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு பழிச்சொல் வீசுவதை கண்டு, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும், நாங்களும் களங்கப்போவதுமில்லை; கடமை தவற போவதுமில்லை; என்று ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close