fbpx
REதமிழ்நாடு

தண்டையார்பேட்டையில் தினகரன் வருகையால் அதிமுக – அமமுக தொண்டர்கள் இடையே மோதல், கல்வீச்சு!

தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்க தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார்.

டிடிவி தினகரன் வருகையால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

டிடிவி தினகரனின் ஆதரவாளர்களின் வாகனம் மீது, அதிமுகவினர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

அதிமுகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பெண் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close