fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

கோவையில் முதல்வர் எடப்பாடி கார் மீது கல்வீச்சு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளத.

கடந்த புதன்கிழமை (18/07/2018) அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு முதல்வர் வருகை தந்தார்.

அங்கிருந்து இராணுவ காவல் படையினரின் பாதுகாப்புடன் சேலத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது, கோயம்புத்தூர் எல்லையை கடந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழையும் போது, முதல்வர் சென்ற கார் மீது கல் வீசப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, கார் நிறுத்தப்பட்டு, முதல்வருக்கு மாற்று கார் ஏற்பாடு செய்யப்பட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், புதன்கிழமை இரவு திருப்பூர் மாவட்ட போலீசாரை, உயரதிகாரிகள் சந்தித்து இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளனர்.

எனினும், திட்டமிட்டப்படி நேற்று இரவு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தததுடன் அவர் செல்லும் சேலம் – கோவை வழியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் எந்த முறையான அறிவிப்பும்

Related Articles

Back to top button
Close
Close