ஈரோடு–இலஞ்சத்திற்கு எதிராக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்..
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டனர்,
ஈரோடுவட்டம்பவானிசாகர்ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி கொக்கரக்குண்டி பகுதியை சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் மற்றும் திரு. கனகராஜன், விவசாயிகளின் இவர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர், இவர்கள் இருவரும் தங்களது விவசாய தோட்டத்திற்கு பைப்லைன் அமைக்க தடையில்லா சான்றிதழ் மற்றும் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கும் படி கொத்தமங்கலம் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்,ஆனால் மாதக் கணக்கில் இழுத்தடித்ததால் அது குறித்து ஊராட்சி தலைவர் திருமதி.மல்லிகா மற்றும் துணைத் தலைவர் திரு.செல்வன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டபோது இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால்தான் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர், .ஆகவே மனவேதனை அடைந்த விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத் துறையை நாடி இது குறித்து புகார் அளித்தனர்,லஞ்சஒழிப்புத்துறைஆலோசனைப்படி செயல்பட்ட விவசாயிகள் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று காலை 240000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் திரு.ராஜன், ஊராட்சி தலைவர் திருமதி மல்லிகா மற்றும் துணைத் தலைவர் திரு செல்வன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்
லஞ்சஒழிப்புத்துறைதுணைகண்காணிப்பாளர்ஆய்வாளர்மற்றும்உதவிஆய்வாளர்கள் உட்பட அனைத்துலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.